தோனி 60 வயது வரை சிஎஸ்கேவுக்காக விளையாட வேண்டும்.. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்.. தல பதில் என்ன தெரியுமா?

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே ரசிகர்களுடனான சந்திப்பில் எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்த சுவாரஸ்யமான விவாதம் எழுந்தது. 

 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், "தோனி 60 வயது வரை விளையாட வேண்டும்" எனத் தனது ஆசையை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளித்த தோனி, "அது மிகவும் கடினம், வயது ஏற ஏற உடல் தகுதி குறைந்து கொண்டே வருகிறது" என்று எதார்த்தமாக பேசினார். இருப்பினும், ரசிகர்களின் வற்புறுத்தலால் "முயற்சி செய்கிறேன்" என்று அவர் கூறியது சேப்பாக்கம் மைதானத்தையே அதிர வைத்தது.

 

இதே நிகழ்வில், சிஎஸ்கே அணியின் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோருக்கு ஹால் ஆஃப் பேம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

 

முத்தையா முரளிதரன், அம்பதி ராயுடு உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் இதில் கலந்துகொண்டனர். வரும் மார்ச் 30-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் சிஎஸ்கே தனது 2026 ஐபிஎல் பயணத்தைத் தொடங்குகிறது. கடந்த முறையை விட இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் யெல்லோ ஆர்மி தீவிரமாக உள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.