வைபவ் சூர்யவன்ஷி சொல் பேச்சை கேட்க மாட்டார்.. அவர் இன்னும் சிறுவர் தான்: ஆர்சிபி வீரர் கிண்டல்..!
ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி குறித்த சுவாரஸ்யமான விவாதம் எழுந்துள்ளது.
கடந்த சீசனில் சதம் அடித்து சாதனை படைத்த வைபவ், களத்தில் காட்டும் முதிர்ச்சியை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் வெகுவாக பாராட்டினார். "அவர் தனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் விளையாடுகிறார், மிகவும் தொழில்முறை வீரராக திகழ்கிறார்" என டி வில்லியர்ஸ் புகழ்ந்தார்.
இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஜித்தேஷ் சர்மா இதற்கு முரணான ஒரு தகவலை நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார். "வைபவ் களத்திற்கு வெளியே இன்னும் ஒரு சிறுவனாகவே இருக்கிறார். இரவு நேரங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம் என்று எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர் கேட்பதில்லை. எனவே அவர் களத்திற்கு வெளியே ஒருபோதும் Professional ஆக மாறமாட்டார்" என்று ஜித்தேஷ் கிண்டலாக கூறினார்.
14 வயதிலேயே உலக புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில் ஜொலிக்கும் வைபவ்வின் இந்த சிறுபிள்ளைத்தனமான ஆசைகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு உணவு கட்டுப்பாடு அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.