விக்கெட் கீப்பர் தோனி.. பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்.. பவுலர் முரளிதரன்.. களைகட்டிய சேப்பாக்கம் பயிற்சி போட்டி..!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட நிகழ்வை நடத்தியது. இதில் சிஎஸ்கே அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய ஜாம்பவான்கள் பங்கேற்ற ஒரு பயிற்சிப் போட்டி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

 

குறிப்பாக, சிஎஸ்கே-வின் புதிய வரவான சஞ்சு சாம்சன், சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனை எதிர்கொண்டார். அப்போது எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பிங் செய்தது ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை தூண்டியது. 

 

ஒரு பந்தில் சஞ்சு சாம்சன் ஸ்டம்பிங் ஆகும் வாய்ப்பை நழுவவிட்ட தோனி, அதை சிரிப்புடன் கடந்து சென்றார். இறுதியில், டி20 உலகக்கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன், முரளிதரன் பந்துவீச்சில் ஒரு சிக்சர் அடித்து அசத்தினார்.

 

நிகழ்வின் ஒரு பகுதியாக, டி20 உலகக்கோப்பை வென்ற சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்ற கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோருக்கு தோனி நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்த சிஎஸ்கே, இந்த முறை 6-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் பலமான அணியுடன் களம் இறங்குகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.