கேப்டனையே வெளியே போக சொன்ன சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்.. அணிக்குள் பிரச்சனையா?

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இஷான் கிஷன், பயிற்சி போட்டியின் போது சக வீரர் ஜீஷன் அன்சாரியால் ஆக்ரோஷமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

காயம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள பேட் கம்மின்ஸிற்கு பதிலாக கிஷன் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது, ஜீஷன் வீசிய ஓவரில் இஷான் கிஷன் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களை விளாசினார்.

 

இருப்பினும், அடுத்த பந்திலேயே கிஷனை வீழ்த்திய லெக் ஸ்பின்னர் ஜீஷன், அவரை பெவிலியன் நோக்கி செல்லுமாறு கைகளால் சைகை காட்டி ஆக்ரோஷமாக வழிப்படை அனுப்பினார் . கேப்டன் என்றும் பாராமல் சக வீரர் இவ்வாறு நடந்துகொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆனால், இஷான் கிஷன் இதனை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றார்.  இந்த சம்பவம் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பினாலும், கிஷனின் நிதானமான அணுகுமுறை அனைவராலும் பாராட்டப்படுகிறது. அபிஷேக் சர்மா தற்போது அணியின் துணை கேப்டனாக செயல்படுகிறார்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.