Aadu 3 படத்தின் First Single - வேதிகா நடனத்தில் சுல்தான் பாடல் வெளியானது

மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் கல்ட் காமெடி திரைப்படமாக தனி இடத்தை பெற்ற Aadu. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான Aadu 2 திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது அந்த சீரிஸின் மூன்றாவது பாகமான Aadu 3 உருவாகியுள்ளது.

இந்த படத் தொடரின் மையக் கதாபாத்திரமான ஷாஜி பாப்பன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயசூரியா மீண்டும் நடித்துள்ளார். அவரின் வித்தியாசமான காமெடி நடிப்பு, உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி காரணமாக இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

2015-ல் வெளியான முதல் பாகம் துவக்கத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் டிவி மற்றும் இணைய தளங்களில் கல்ட் ஹிட்டாக மாறியது. அதனால் 2017-ல் வெளியான Aadu 2 மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் தான் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளான சுல்தான் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வேதிகாவின் நடனத்தில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

#Aadu3 1st Single "SULTHAAN" Video Song Out Now https://t.co/ElADJQTozQ A Shaan Rahman Musical In Cinemas From March 19 pic.twitter.com/rEPVcRxIHr

— Trendswood (@Trendswoodcom) March 14, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.