சிறை: காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.

7 Screen Studio லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘சிறை

இப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய விக்ரம் பிரபு, " ஒவ்வொரு படமும் நடிக்கும்போதும் தாத்தாவின் (சிவாஜி) பெயரையும், அப்பாவின் (பிரபுவின்) பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும், பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் சார் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன்.

கும்கியில் இருந்து சிறை வரை, காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும், தோல்வியும் சந்தித்து வருகிறேன்.

சினிமாவில் உள்ள அரசியல், தட்டியும், தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன்.

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு

25 ஆண்டுகள் கடந்தும், இதுதான் ஆரம்பம் என்பது போல நகருகிறேன். நான் உனக்கு உதவி எல்லாம் பண்ண மாட்டேன். நீயே தான் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று அப்பா சொன்னார்.

அதற்கு ஏற்றமாதிரி விஷயங்களைக் கற்றுக்கொண்டு தான் வந்திருக்கிறேன். முதல் படத்தில் கும்கி யானையை பிடித்து சென்றதுபோல, ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையை பிடித்து சென்று கொண்டிருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.