Arya 40 | நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யாவுடன் இருக்கும் படங்களை பகிர்ந்த ஆர்யா - கிண்டலடித்த சதீஸ்

தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஆர்யா தனது 40 ஆவது படத்தில் நடிக்கிறார். நிகில் முரளி இயக்கும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

Working out in progress ???Loading #Arya40 @NikhilMuraly @Nikhilavimal1 @iamvaishnavi04 @gvprakash @JeevaSankar pic.twitter.com/Ki3coa8KKt

— Arya (@arya_offl) March 9, 2026

இந்நிலையில், இப்படத்திற்காக ஜிம்மில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா உடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இதையடுத்து ஆர்யாவை கிண்டலடிக்கும் வகையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்களை பகிர்ந்த சதீஸ், நான் எல்லாம் ஜிம்முக்கு போனா வந்த வேலையை மட்டும் தான் பாக்குறது" என்று பதிவிட்டுள்ளார். சதீஷின் பதிவை பகிர்ந்து நடிகர் ஆர்யாவும் அவரை கிண்டலடித்துள்ளார்.

Haha ? Nalla velaiya palate macha ? https://t.co/oEq4b5ZSc3

— Arya (@arya_offl) March 10, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.