நன்றி என் பொண்டாட்டி.. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் மனைவிக்காக சஞ்சு சாம்சனின் இன்ஸ்டா பதிவு..!

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற இந்திய வீரர் சஞ்சு சாம்சன், தனது வெற்றியை மனைவி சாருலதாவிற்கு அர்ப்பணித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

 

நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், சஞ்சுவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தின் ஏற்ற இறக்கங்களில் உறுதுணையாக இருந்த மனைவியை பாராட்டிய சஞ்சு, "நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை என் நிழலாக என்னுடன் இருப்பதற்கு நன்றி. உலகம் என்னை எப்படி பார்த்தாலும், என்னுள் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்களை அறிந்து என்னை நேசித்தவர் நீங்கள். கிரிக்கெட் என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொண்டு, எனக்காகவும் என் வெற்றிக்காகவும் என்னை போலவே கனவு கண்டவர் நீங்கள். நன்றி என் பொண்டாட்டி" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 

 

சஞ்சுவின் இந்த வெற்றிக்கு பின்னால் அவரது கடின உழைப்பும், குடும்பத்தின் ஆதரவும் இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Edited by Siva

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.