D56: இந்த முறையும் சிவகார்த்திகேயன் ஹீரோயினை டார்கெட் செய்த தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் என பல்வேறு மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் குபேரா வெளிவந்தது. ஆனால் இப்படம் தெலுங்கில் கிடைத்த வெற்றி அளவிற்கு தமிழில் கிடைக்கவில்லை. தற்போது காரா என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷ் அடுத்து லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பசமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கும் நாயகி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவி, பராசக்தி படத்தில் நடித்த ஸ்ரீலீலா ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் உறியடி பட நாயகன் விஜயகுமார் நடிக்க உள்ளார்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

