3 முறை உலகக்கோப்பை, 2 முறை தொடர்ச்சியாக, சொந்த மண்ணில் கோப்பை.. சாதனை மேல் சாதனை படைத்த இந்தியா..!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

 

இதன் மூலம் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் ஏற்பட்ட தோல்வியின் வடுவை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி துடைத்தெறிந்துள்ளது.

 

முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. சஞ்சு சாம்சன் 89 ரன்கள் மற்றும் அபிஷேக் சர்மா 52 ரன்கள் என்ற அதிரடி ஆட்டம் இந்தியாவிற்கு வலுவான அடித்தளமிட்டது. பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் நிலைகுலைந்து, 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மூன்று முறை அதாவது 2007, 2024, 2026 சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

 

மேலும், தனது சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு மற்றும் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி என்ற இரட்டை சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது. 

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.