ஒரே போட்டியில் 5 சாதனைகள் படைத்த இந்திய அணி... குவியும் வாழ்த்துக்கள்..!

 

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா பல உலக சாதனைகளை படைத்துள்ளது:

 

மூன்று முறை (2007, 2024, 2026) டி20 கோப்பையை வென்ற முதல் அணி.

 

பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி

 

சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி.

 

சஞ்சு சாம்சன் ஒரு டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அதாவது 321 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.

 

பும்ரா டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் அதாவது 39  விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

 

பெண்களுக்கான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு, ஆண்களின் இந்த மெகா வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.