என் காதலியால் தான் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கிறது: ஹர்திக் பாண்டியா பேட்டி..!

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது எதிர்கால இலக்கு குறித்து அதிரடியான பேட்டியை அளித்துள்ளார். 

 

2024 மற்றும் 2026 ஆகிய இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளிலும் முக்கிய தூணாக விளங்கிய அவர், இன்னும் 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பாதியை மட்டுமே கடந்துள்ளேன், இன்னும் 10 ஆண்டுகள் மீதமுள்ளன. அதற்குள் ஐசிசி மற்றும் ஐபிஎல் தொடர்களை சேர்த்து மொத்தம் 10 கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன்" என்று பாண்டியா நம்பிக்கையுடன் கூறினார். 

 

குறிப்பாக, தனது வாழ்க்கைத் துணை மஹேகா சர்மா வந்த பிறகு, தான் தொட்டதெல்லாம் வெற்றியாகவே முடிகிறது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

இந்த தொடரில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியதுடன், நாக்-அவுட் போட்டிகளிலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி பாண்டியா அசத்தினார். 

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.