சச்சின் கொடுத்த மனவலிமை தான் வெற்றிக்கு காரணம்: சஞ்சு சாம்சன்.. கில்லர் காம்போ.. தோனி வாழ்த்து..!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா படைத்த வரலாற்று சாதனைக்கு கிரிக்கெட் உலகின் ஜம்பவான்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, "அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் புன்னகையுடன் கூடிய தீவிரம் ஒரு கில்லர் காம்போவாக உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த தொடரின் நாயகனாக உருவெடுத்த சஞ்சு சாம்சன் தனது வெற்றிக்கு பின்னால் இருந்த ரகசியத்தை உடைத்துள்ளார். "ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்தபோது, சச்சின் டெண்டுல்கர் சாரை தொடர்பு கொண்டேன். அவர் எனக்கு ஆட்டத்தின் நுணுக்கங்கள் மற்றும் மனவலிமை குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். நேற்றிரவு கூட அவர் அழைத்து எனக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்" என்று சாம்சன் நன்றியுடன் தெரிவித்தார்.
நட்சத்திர வீரர் விராட் கோலி தனது எக்ஸ் தளத்தில், "சாம்பியன்கள்! அகமதாபாத்தில் ஒரு அற்புதமான வெற்றி. இந்த தொடர் முழுவதும் இந்தியா ஆடிய அதிரடி ஆட்டத்திற்கு ஈடு இணையே இல்லை. நெருக்கடியான சூழலிலும் வீரர்கள் காட்டிய மன உறுதி அபாரமானது" என்று பாராட்டியுள்ளார்.
இந்த உலகக்கோப்பை வெற்றி, இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


