கோப்பையை 2 பேருக்கு சமர்ப்பித்த காம்பீர்.. தனக்கு ஆதரவாக இருந்த ஜெய்ஷாவுக்கும் நன்றி..!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தனது மூன்றாவது டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 

 

டெஸ்ட் தொடர் தோல்விகளால் விமர்சனத்திற்குள்ளான பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இந்த வெற்றி ஒரு தகுந்த பதிலடியாக அமைந்துள்ளது. "எனது பொறுப்பு  சமூக ஊடகங்களுக்கு அல்ல, டிரஸ்ஸிங் ரூமில் உள்ள 30 பேருக்கு மட்டுமே" என்று கம்பீர் கறாராக தெரிவித்துள்ளார்.

 

இந்த வெற்றியை முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோருக்கு கம்பீர் சமர்ப்பித்துள்ளார். மேலும், தோல்வி காலங்களில் தனக்கு ஆதரவாக இருந்த ஜெய்ஷா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். "தனிப்பட்ட மைல்கற்களை கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, கோப்பைகளை கொண்டாட பழகுங்கள்" என அவர் வலியுறுத்தினார்.

 

கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசுகையில், அவர் தனது பணியை எளிதாக்கிய ஒரு தந்தை போன்ற தலைவர் என்று புகழ்ந்தார். சூர்யகுமார் பதில் கூறுகையில், "எங்கள் நட்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் காலத்திலிருந்தே உறுதியானது, 2028 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு" என்றார்.  

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.