கிரிக்கெட் விளையாட்டையே இந்தியா அழித்துவிட்டது: பொறாமையில் பொசுங்கிய சோயப் அக்தர்

 

2026 டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. 

 

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியை பாராட்டுவதற்கு பதிலாக, அக்தர் இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

"ஒரு பணக்கார வீட்டுப் பையன் ஏழைப் பசங்களை விளையாட கூப்பிட்டு, தான் நினைத்தபடி விளையாடி ஜெயிப்பது போல இந்தியா செய்கிறது. அவர்கள் கிரிக்கெட்டையே அழித்துவிட்டார்கள்" என்று அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசினார். முன்னதாக, கிரிக்கெட்டின் நலனுக்காக நியூசிலாந்து ஜெயிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்றொரு பாகிஸ்தான் வீரரான முகமது அமீர், இந்தியாவின் வெற்றிக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடே காரணம் என்று கூறியுள்ளார். 
 

இத்தகைய எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியில், இந்திய ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் அதிரடி 89 ரன்களையும், பும்ராவின் அனல் பறக்கும் 4 விக்கெட்டுகளையும் கொண்டாடி வருகின்றனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் சரியான திட்டமிடலே இந்த ஹாட்ரிக் வெற்றிக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.