ஆரம்பம்..! ஆரம்பம்..! டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண மோடி ஸ்டேடியத்தில் குவிந்த ரசிகர்கள்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா- நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

சொந்த மைதானத்தில் என்பதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நியூசிலாந்தும் நல்ல போட்டி கொடுக்க தயாராக உள்ளது. இதனால் போட்டி மிகவும் சுவாரஸ்சியமாகவும், விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும்.

இந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம். இப்போட்டியை காண டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் மைதானத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். மதியம் 1 மணியில் இருந்து அவர்கள் ஸ்டேடியம் முன் குவியத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.