இறுதிப்போட்டிக்கு இந்த வீரர் வேண்டாம்.. அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். காம்பீருக்கு அறிவுரை கூறிய கைஃப்

2026 T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவின் இடம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. நடப்பு தொடரில் 7 இன்னிங்ஸ்களில் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அபிஷேக், ஃபார்ம் அவுட்டில் உள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார்.

 

பெரிய போட்டிகளில் மாற்றங்கள் செய்வதில் தவறில்லை என்று குறிப்பிட்ட கைஃப், சஞ்சு சாம்சன் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வீரர் என்றும், ஆனால் அபிஷேக் சர்மா இன்னும் முதிர்ச்சியடையாத வீரர் என்றும் தெரிவித்தார்.

 

 "ரிங்கு சிங் எல்லா இடங்களிலும் ரன் குவிக்கும் திறமை கொண்டவர். ஒரு வீரர் தடுமாறும்போது, சிறப்பாக செயல்படும் மற்றொரு வீரரை வெளியே அமர வைப்பது சரியாக இருக்காது" என்று அவர் கூறினார்.

 

ஒருவேளை பந்துவீச்சை வலுப்படுத்த நினைத்தால் குல்தீப் யாதவ் அல்லது முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என்றும் கைஃப் யோசனை தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் கௌதம் கம்பீர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.