இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இதுவரை வெல்லாத நியூசிலாந்தை வென்று இந்தியா சாதனை படைக்குமா?
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நமது பயணம், மீண்டும் 2023-ல் நாம் விட்டு சென்ற அதே மைதானத்தில் முடிவடைய போகிறது. கடினமான சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் உறுதியாக இருக்க வேண்டும். அழுத்தம் இல்லாத போட்டியில் பரபரப்பு இருக்காது" என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


