Sundar C | புருஷன் திரைப்படம் ஜாலியா, தமாஷா இருக்கும்... வெளியான மேக்கிங் வீடியோ அப்டேட்
இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் `புருஷன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைெபற்று வரும் நிலையில், படக்குழு சார்பில் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
புருஷன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் X தளத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவில் இயக்குநர் சுந்தர் சி, தமன்னா, விஷால், யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் படம் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
Peak #SundarC Entertainment loading ?
— Avni Cinemax (@AvniCinemax_) March 6, 2026
An exclusive behind-the-scenes peek from the sets of #Purushan.
Stay tuned for more ❤️? @benzzmedia @AcsArunkumar @VishalKOfficial @tamannaahspeaks @hiphoptamizha @iYogiBabu @khushsundar #AnanditaSundar @vichuviswanath @Venkatt_Ragavan… pic.twitter.com/OCwufdENB9
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


