ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: கபிலா-கிரஸ்டோ ஜோடி 2வது சுற்றில் விலகல்

பெர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கபிலா-கிரஸ்டோ ஜோடி, ஹாங்காங்கின் செ யிங் சூ-டேங் சுன் மான் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய ஹாங்காங் ஜோடி 21-19 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 9-8 என இருந்தபோது, இந்திய ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதனால் ஹாங்காங் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.