#HappyRaj ஹேப்பி ராஜ் வரான்... ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் `லவ் டுடே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலாக " ஆடினே இருப்பேன்" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்தது.

இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படம் வருகிற மார்ச் 27-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.