#TheBoys தொடரின் கடைசி சீசன் வெளியாகும் தேதி அறிவிப்பு
2019-ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான தி பாய்ஸ் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஹீரோக்கள் வில்லன்களாக இருந்தால் எப்படி இருக்கும் என வித்தியாசமான யோசனையில் உருவான இந்த தொடர் பெரும் வெற்றி பெற்று அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி சக்கை போடு போட்டது.
சூப்பர்மேன் பவர் கொண்ட ஹோம்லேண்டர் என்ற வில்லனை கொலை செய்ய பில்லி பட்சர் என்ற டீம் முயற்சிப்பதே இந்த தொடரின் முக்கிய ஒன்லைன்.
இந்நிலையில், தி பாய்ஸ் தொடரின் இறுதி சீசன் ஏப்ரல்-8 வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த் சீசனிலாவது ஹோம்லேண்டர் கொல்லப்படுவாரா என்று தி பாய்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் இடஙக தொடரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

