அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முக்கிய போட்டியில் தோல்வி என்ற முத்திரை தென்னாப்பிரிக்க அணியை விட்டு நீங்குவதாக தெரியவில்லை. 2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் கண்ட தோல்வி, அந்த அணியின் ரசிகர்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக நாக்-அவுட் சுற்றுகளில் தென்னாப்பிரிக்கா சந்திக்கும் தொடர் தோல்விகள் ஒரு தீராத சாபமாகவே மாறிவிட்டது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடமும், 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடமும் கோப்பையை நழுவவிட்ட தென்னாப்பிரிக்கா அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அரையிறுதியோடு வெளியேறியது. லீக் சுற்றுகளில் அசுர பலத்துடன் ஆடும் தென்னாப்பிரிக்க வீரர்கள், அழுத்தங்கள் நிறைந்த நாக்-அவுட் போட்டிகளில் மனதளவில் தடுமாறுகின்றனர்.
முக்கியமான தருணங்களில் கேட்ச்களை விடுவது, பந்துவீச்சில் சொதப்புவது என தொடர்ச்சியான தவறுகள் அவர்களின் கோப்பை கனவை சிதைக்கின்றன. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும், ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாத தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, உலகின் பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது.
இந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மனவலிமையுடன் தென்னாப்பிரிக்கா மீண்டெழுமா என்பதே தற்போதைய கேள்வியாகும்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


