இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து வென்றது. 
 

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில், இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் உற்சாகமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

 

இந்தியா இதுவரை எப்படி விளையாடியது என்பது கடந்த காலம், அடுத்த இரண்டு வெற்றிகளே உலகக்கோப்பையைத் தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். 
 

ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு புதிய வீரர் பொறுப்பேற்று அணியை வெற்றிக்கு அழைத்து செல்வது இந்தியாவின் தனிச்சிறப்பு என்று அவர் புகழ்ந்தார். பலமான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது ரன்களை கட்டுப்படுத்துவது சவாலானது என்றாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில், இந்திய வீரர்கள் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். வெற்றியை யாராலும் உறுதி செய்ய முடியாது என்றாலும், வான்கடே மைதானத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.