டி20 உலகக் கோப்பையில் அதிவேக சதம்: சாதனை படைத்த பின் ஆலன் #FinnAllen

கொல்கத்தா:

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. யான்சென் அதிரடியாக ஆடி 30 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 55 ரன்கள் குவித்தார்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து வென்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. பின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் பின் ஆலன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2016-ம் ஆண்டில் கிறிஸ் கெயில் 47 பந்தில் சதமடித்து இருந்தார்.

மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் சதமடித்தோர் பட்டியலில் பின் ஆலன் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு முன் நமீபியாவின் ஜான் நிகோல் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோர் 33 பந்துகளில் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.