மகரம் : `தொட்டது துலங்கும்; சொந்தவீடு யோகம் உண்டு! | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகர ராசியின் அதிபதி சனி. உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும். இந்த ராசிக்காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை விடமாட்டார்கள். பொறுமையும் வரவுக்கேற்ப செலவு செய்யும் பழக்கமும் இவர்களின் பலம்!
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. மகர ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, சனி 3-ல் அமர்கிறார். இனி, தொட்டதெல்லாம் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைப் பாக்கியம் இல்லாத வர்களுக்கு இனி வாரிசு உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமைந்து, திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

2. பொருளாதாரம் செழிப்புற்றுத் திகழும். பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலை மாறும். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சைனஸ் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விஐபி அந்தஸ்து பெறுவீர்கள். வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.

3. அரசாங்க வேலைகள் விரைந்து முடியும். வரும் ஏப்ரலுக்குள் அரசு தொடர்பான விஷயங்களைக் கையில் எடுத்தால், அது சாதக மாகும். எனினும் அம்மாவின் உடல்நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும்.

4. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 உத்திரட்டாதியில் செல்வ தால், திடீர் பணவரவு உண்டு. சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். அவரே 14.4.2027 முதல் 24.4.2028 வரை உங்களின் சப்தம - ஜீவனாதி பதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். புது வேலை கிடைக்கும். சம்பளம் உயரும்.

சனி பகவான்

5. சனி வக்ர நிலையில் சஞ்சரிக்கும் காலங்களில், எதிலும் கொஞ்சம் நிதானம் அவசியம். 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனி வக்ரத்தில் செல்வதால், வேலைப்பளுவும் அலைச்சலும் உண்டு. விமர்சனங்களைத் தவிர்க்கவும்.

6. சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தைச் சமாளிக்கப் போராடுவீர்கள். உயர்கல்வி, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

7. சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தந்தையாருடன் கருத்துமோதல்கள் அதிகரிக்கும். சொத்து விவகாரங்களை கவனமாகக் கையாளுங்கள்.

8. சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியில் சம்பளம் உயரும். எதிர்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள்.

10. வியாபாரிகளே, திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். விளம்பர யுக்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். கடையை நவீனமயமாக்கு வீர்கள். அரசாங்கக் கெடுபிடிகள் குறையும்.

11. உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வும், சம்பளப் பாக்கியும் உடனே கிடைக்கும். சிலருக்கு, அதிகச் சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். கணினித் துறையினருக்கு, வேலைக்கேற்றபடி சம்பளம் உயரும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.