இதோட நிறுத்திக்கனும்: அவதூறு பரப்புபவர்களை விளாசிய ‘வாட்டர்மெலன்’ ஸ்டார்!
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி, தற்போது பிக்பாஸ் சீசன் 9 மற்றும் சில படங்களில் நடித்து வரும் திவாகர் (எ) வாட்டர்மெலன் ஸ்டார், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுபவர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த சில தினங்களாகவே நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து குறித்துப் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன. இது குறித்துப் பேசிய திவாகர், விஜய் சாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பது ஒரு கணவன், மனைவிக்கு இடையிலான சாதாரணப் பிரச்சனை அல்லது சண்டையாக இருக்கலாம். அதைப் பற்றிப் பொதுவெளியில் விவாதிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பயில்வான், சுசித்ரா மீது நேரடித் தாக்குதல்
குறிப்பாக, சினிமா திரைமறைவு ரகசியங்களைப் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், பாடகி சுசித்ரா மற்றும் ஜூலி போன்றவர்களைத் திவாகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கம்:
இவர்கள் மூவரும் நடிகர் விஜய்யைப் பற்றி அவதூறாகப் பேசுவதன் மூலம் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ (Views) பெற்று, அதன் மூலம் பணம் சம்பாதிக்கவே முயல்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மனிதாபிமானமற்ற செயல்:
ஒருவரது குடும்ப விஷயத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக இந்த விமர்சனங்களை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திவாகர் vs பயில்வான் ரங்கநாதன் – தொடரும் மோதல்
ஏற்கனவே ஒரு திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் திவாகருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


