அடுத்தடுத்து 3 படங்களை இறக்கும் சூர்யா!.. ஃபேன்ஸ் செம ஹேப்பி!…
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சூர்யா. கடந்த பல வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படத்திற்காக காத்திருக்கிறார்.. ஆனால் அவரின் நேரமா என்னவோ எல்லாம் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது. கங்குவா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து வெளிவந்த ரெட்ரோ சுமாரான வெற்றியை பெற்றது..
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படம் ஒரு பக்கா கமர்சியல் மசாலா திரைப்படம்.. ஆனால் அந்த படத்தின் ஓடிடி விற்கப்படாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. அதேபோல் கருப்பு படத்தை முடித்துவிட்டு லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க போனார் சூர்யா.. அந்த படம் முடிந்து இன்று காலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.. இந்த படத்திற்கு விஸ்வநாத & சன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது..
இந்த படத்தை முடித்துவிட்டு மலையாள பட இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது. பக்கா கமர்சியல் மசாலா திரைப்படமான கருப்பு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்கிறார்கள்..
அதேபோல் விஸ்வநாத் & சன்ஸ் வருகிற ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.. இது ஒரு குடும்ப கதை என சொல்லப்படுகிறது.. ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்கிறார்கள்.. இது காமெடி மற்றும் ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு திரைப்படம் என சொல்லப்படுகிறது.. இப்படி, இந்த வருடத்தில் சூர்யாவின் 3 திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தவிருக்கிறது..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


