வெளியானது அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர்
ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் அன்பே டயானா. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டீசரில் பெரம்பூரில் வசிக்கும் கதாநாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர். மேலும் கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பொழுதுபோக்கு குடும்ப படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


