டி20 உலகக் கோப்பையில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது- ரோகித் உடன் இணைந்த பாண்ட்யா
இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 256 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். பந்து வீச்சில 3 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
டி20 உலகக் கோப்பையில் இது அவரின் 3-வது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதன்மூலம் ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
விராட் கோலி 8 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்று 2-வது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


