நடிகைகளின் போலி ஆபாச படங்கள்: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -அனுபமா பரமேஸ்வரன்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடி கையாக கவர்ந்து வருகிறார், அனுபமா பரமேஸ் வரன். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த பைசன் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கிடையில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் வெளியாவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

"சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுகிறார்கள். இதுபோன்ற விஷம ஆசாமிகளை களையெடுக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற கூடாது. இதுபோன்ற கேடுகெட்ட சிந்தனையாளர்கள் தண்டிக்கப்பட்டால் தான், இந்த கேவலமான விஷயங்கள் ஒழிக்கப்படும்" என்று ஆவேசம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.