24 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக... ஜிம்பாப்வே அணியின் சுவாரஸ்ய தகவல்

சென்னை:

டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.

அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இரு அணிகளுக்கும் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை என்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக விளையாடி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது. அந்த அணி கடைசியாக மார்ச் 19, 2002 அன்று குவஹாத்தியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது. அதன் பிறகு பல ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே இந்தியாவில் விளையாடியிருந்தாலும், இந்திய அணிக்கு எதிராக அவர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.