என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன் - திருமண புகைப்படங்களை வெளியிட்டார் விஜய் தேவரகொண்டா!

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஜோடி. இப்படங்களில் இருந்து இருவரும் காதலிப்பதாக நீண்டநாட்களாக, வருடங்களாக பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் எவற்றிற்கும் பதிலளிக்காமல் அமைதியாகவே நட்பை தொடர்ந்த இந்த ஜோடி. 

இந்நிலையில் ஜனவரி தொடக்கத்திலிருந்தே இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பை, ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விரோஷ் என்ற பெயரிலேயே அறிவித்தனர். 

இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் காலை 10:10 மணிக்கு தெலுங்கு பாரம்பரியப்படியும், ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மாலை 4:30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி கொடவா பாரம்பரியப்படியும் என இருமுறை திருமணச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தம்பதியினருக்குக் கடிதம் மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தம்பதியினர் தற்போது அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டு விஜய்,

"ஒரு நாள், நான் அவளை மிகவும் தேடினேன் (Miss பண்ணினேன்).

அவள் கூட இருந்திருந்தால் என் நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் வகையில் அந்தத் தேடல் இருந்தது.

அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும் திருப்தியாகவும் இருந்திருக்கும் என்று தோன்றியது.

அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

நான் எங்கே இருந்தாலும், அந்த வீடு போன்ற உணர்வையும் அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள்.

அதனால்,

என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

One day, I missed her.

Missed her in a way that made me feel like my day wouldve been better if she were around.
Like my meals wouldve felt more wholesome if she were sitting across from me.
Like my workouts wouldve been more fun and less of a punishment if she were doing… pic.twitter.com/fy7umfHWjN

— Vijay Deverakonda (@TheDeverakonda) February 26, 2026


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.