டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை

கொழும்பு:

டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற இலங்கை அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் களத்தில் உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.