அபிஷேக் சர்மாவுடன் கவுதம் கம்பீர் உரையாடும் காட்சிகள் இணையத்தில் வைரல்
இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் மோசமா ஃபார்ம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. தொடர் முழுவதும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்த உலகின் நம்பர் 1 டி20 வீரரான அபிஷேக் சர்மா, சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி சென்னையில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. குரூப் சுற்று போட்டிகளில், தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட் ஆன நிலையில், அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 தொடக்க ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார்.
எனினும், அதை அவர் குறிப்பிடத்தக்க இன்னிங்ஸாக மாற்றத் தவறிவிட்டார், ஐந்தாவது ஓவரில் மார்கோ ஜான்சனுக்கு அவரது விக்கெட்டை கொடுத்து வெளியேறினார்.
மோசமான ஃபார்ம் காரணமாக அபிஷேக் சர்மா அடுத்த போட்டியில் விளையாடாத சூழ்நிலை வராது என்றாலும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அபிஷேக் உடனான உரையாடிய காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. வைரல் வீடியோவில், கம்பீர் அபிஷேக் உடன் தீவிரமாக பேசுவதை காணலாம்.
கம்பீர் மற்றும் அபிஷேக் உரையாடலின் போது உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் அவர்களுடன் இணைந்தார்.
?Gautam Gambhir having a serious discussion with Abhishek Sharma on the team bus after arriving in Chennai for the next match against Zimbabwe.
— Sonu (@Cricket_live247) February 23, 2026
Guess what they are discussing.? pic.twitter.com/dpGj1TTJM3
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


