சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற மணிப்பூர் திரைப்படம் - வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
பிரிட்டனின் சர்வதேச திரைப்பட விழாவான BAFTA விருது விழாவில் மணிப்பூர் படமான Boong திரைப்படம் விருது வென்றுள்ளது.
சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம் பிரிவில் இப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
Arko, Lilo and Stitch மற்றும் Zootropolis 2 போன்ற முன்னணி சர்வதேச திரைப்படங்களுடன் போட்டியிட்டு Boong இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது.
மணிப்பூரில் நிலவும் சமூகப் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிந்து சென்ற தனது குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்கப் போராடும் ஒரு சிறுவனின் பயணமே இப்படத்தின் கதையாகும்.
லக்ஷ்மிப்பிரியா தேவி இயக்கிய இத்திரைப்படத்தை பிரபல நடிகர் பர்ஹான் அக்தர் இணைந்து தயாரித்துள்ளார்.
விழாவில் விருதை ஏற்றுக்கொண்ட இயக்குநர் லக்ஷ்மிப்பிரியா தேவி பேசுகையில், "பல இடர்பாடுகளால் புறக்கணிக்கப்பட்ட எனது தாய் நிலமான மணிப்பூருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். அங்கு மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த படம் BAFTA விருது வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "மணிப்பூர் மக்களுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இது நாட்டின் அபாரமான படைப்பாற்றலை உலகுக்குக் காட்டுகிறது" எனப் பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


