டி20 உலகக் கோப்பையில் அதிரடி அரைசதம்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ஹெட்மயர்
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங் மற்றும் சாய் ஹோப் களமிறங்கினர். இதில் கிங் 9 ரன்னிலும் ஹோப் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சிம்ரன் ஹெட்மயர் மற்றும் பவல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் சாதனையை ஹெட்மயர் முறியடித்துள்ளார்.
கிறிஸ் கெயில் 20 பந்தில் அரைசதம் அடித்திருந்த நிலையில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹெட்மயர் 19 பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வீரர்களில் ஒட்டுமொத்தமாக 8-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வேகமான அரைசதங்கள் அடித்த வீரர்கள் விவரம்:-
1. யுவராஜ் சிங் 12 (இங்கிலாந்து) 2007
2. ஸ்டீபன் மைபர்க் 17 (அயர்லாந்து) 2014
3. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 (இலங்கை) 2022
4. க்ளென் மேக்ஸ்வெல் 18 (பாகிஸ்தான்) 2014
5. கேஎல் ராகுல் 18 (ஸ்காட்லாந்து) 2021
6. ஷோயப் மாலிக் 18 (ஸ்காட்லாந்து) 2021
7 தாசுன் ஷனகா 19 (ஓமன்) 2026
8. ஐடன் மார்க்ராம் 19 (நியூசிலாந்து) 2026
9. ரோஹித் சர்மா 19 (ஆஸ்திரேலியா) 2024
10. ஹெட்மயர் 19 (ஜிம்பாப்வே) 2026
11. கிறிஸ் கெய்ல் 20 (தென்னாப்பிரிக்கா) 2007
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


