ராதிகாவின் தாய் கிழவி - நாளை டிரெய்லர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக்கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

நிவாஸ் கே. பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Our #ThaaiKizhavi trailer drops tomorrow ?
5 days to go - a complete entertainer waiting to be experienced on the big screen. #ThaaiKizhaviFromFeb27 pic.twitter.com/H1chttpZZg

— Radikaa Sarathkumar (@realradikaa) February 22, 2026


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.