இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதியில் மோதினால் அந்த போட்டி எங்கு நடக்கும்? பெரும் குழப்பம்..!

 

2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால், மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோத வேண்டிய சூழல் உருவானால், அந்த போட்டி மும்பையில் நடைபெறாது. மாறாக, இலங்கை கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்திற்கு மாற்றப்படும். 

 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகளை 2027 வரை பொதுவான இடத்திலேயே நடத்த வேண்டும் என்ற இரு நாடுகளுக்கு இடையிலான ஹைப்ரிட் மாடல் ஒப்பந்தமே இதற்கு முக்கிய காரணமாகும்.

 

ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், கொல்கத்தாவில் நடக்க வேண்டிய முதல் அரையிறுதி கொழும்புக்கு மாற்றப்படும். இச்சூழ்நிலையில், மார்ச் 4-ஆம் தேதி ஹோலி பண்டிகை அன்று இந்தியா விளையாட வேண்டியிருக்கும். 
 

மேலும் இந்த தொடரை நடத்தும் நாடான இலங்கை, ஒருவேளை அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் அவர்கள் இந்தியா வந்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த மாற்றங்கள் சூப்பர் 8 சுற்று முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.