23-ந்தேதி வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் மெண்டல் மனதில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக்கி உள்ள படம் மெண்டல் மனதில். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும். இருப்பினும் செல்வராகவனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் முதல் படமாகும்.

இந்த நிலையில், மெண்டல் மனதில் படத்தின் முதல் பாடலான உயிரே உயிரே நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான புரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகி உள்ள லக்கி தி சூப்பர் ஸ்டார் படம் நேற்று முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


#UyireUyire from feb 23rd #MentalManadhil @gvprakash @ParallelUniPic @it_is_madhuri @gdinesh111 @kayoas13 @Arunkrishna_21 @RVijaimurugan @kabilanchelliah @proyuvraaj pic.twitter.com/PDjqmPDSmF

— selvaraghavan (@selvaraghavan) February 20, 2026


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.