3 நாள் லீவ்!.. 3 நாளும் 5 காட்சிகள்!… ஜனநாயகனுக்கு தேதி குறிச்ச புரடியூசர்!.
விஜயின் ஜனநாயகம் திரைப்படர ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சென்சார் மூலம் பிரச்சினை வந்து தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை வெளியாகவில்லை. அதோடு இந்த படம் எப்போது வெளிவரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு மாதம் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று அதன்பின் நிலைமையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இந்த படம் தொடர்பான வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றார்..
மேலும் மறுதணிக்கைக்கும் அவர் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை தணிக்கை அதிகாரிகளால் ஜனநாயகம் படம் பார்க்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் படம் வெளியாவதற்கு கூட வாய்ப்பில்லை. மார்ச் மாதம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடக்கும், அதேபோல் ஏப்ரலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.. மே மாதம் சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அது தொடர்பான பரபரப்பு செய்திகள் என சூடு பிடிக்கும். எனவே இந்த மூன்று மாதங்களுமே படத்தை வெளியிடுவது நல்லதல்ல என தயாரிப்பாளர் நினைக்கிறாராம்..
விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வரும் நிலையில் ஜூன் 25ம் தேதி இந்த படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். ஏனெனில் ஜூன் 26ம் தேதி முகரம் பண்டிகை விடுமுறை வருகிறது.. அதற்கடுத்து இரண்டு நாள் சனி, ஞாயிறு வருவதால் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு அறிவிப்பின்படி அந்த மூன்று நாட்களும் தியேட்டரில் 5 காட்சிகளை திரையிட முடியும்.. எனவே வசூலை எடுத்து விடலாம் என கணக்கு போடுகிறாராம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


