விக்ராந்த்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புது படத்தின் அப்டேட்

நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகிறது. டைட்டில் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு அண்டர் 18 (UNDER 18) என பெயரிடப்பட்டுள்ளது.

ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த வேறு எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

நடிகர் விக்ராந்த் LBW, மதராசி, மார்க் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தீயவர் குலை நடுங்க படம் வெளியானது. அதனை தொடர்ந்து, கருப்பர் நகரம், மோகன்தாஸ், உத்தரகாண்டா, ஓ.! சுகுமாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 


From the corridors of a Govt Observation Home…
A powerful story rises.
Aishwarya Rajesh & Vikranth in UNDER 18
Written & Directed by Karthik Perumalsamy
Produced by B. Jagadish
Title unveiled by director Vetrimaaran ?
An intense, hard-hitting theatrical experience is on the way pic.twitter.com/nEDcmEbZd8

— srproductions_official (@SR_PRO_OFFL) February 19, 2026


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.