இலங்கை, பிரான்சில் வெளியாகும் தாய் கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் தாய் கிழவி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தாய் கிழவி படம் வருகிற 20-ந்தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், வருகிற 27-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. இதனால் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தாய் கிழவி படம் இலங்கையிலும், பிரான்சிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில், ஒரு தாய் எப்போதும் தன் வழியைக் கண்டுபிடிப்பாள். தாய் கிழவி இலங்கைக்கு வருகிறது, Zineflix நிறுவனம் வெளியிடுகிறது. பிரான்சில் 180 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.