ஒருநாள்தான் கேட்டேன்!. ஆனா ஷூட்டிங் முடியும் வரைக்கும்!.. சூர்யா புகழ்பாடும் மமிதா பைஜூ!..
கேரளாவை சேர்ந்தவர் மமிதா பைஜூ.. கடந்த 8 வருடங்களுக்கு மேல் அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான பிரேமலதா திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
எனவே தமிழ்நாட்டிலும் மமிதா பைஜுவுக்கு ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவர் நடித்த டியூட் திரைப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது..
அதேபோல், ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் மமிதா பைஜூ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை சுற்றியே படம் கதை நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் தனுஷின் கர படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
மேலும், லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46வது படத்திலும் மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டிகொடுத்த மமிதா ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா சார் ஒரு ஸ்பெஷலான காபி குடிப்பார்.. அது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. ஒருமுறைதான் நான் அதைப்பற்றி அவரிடம் கேட்டேன்.. அவ்வளவுதான்.. அப்ப இருந்து அந்த படத்தோட ஷூட்டிங் முடிகிற வரைக்கும் எனக்கும் அதே ஸ்பெஷல் காப்பியை வரவழைத்து கொடுத்தார்.. இது ஒரு சின்ன விஷயமா தெரிஞ்சாலும் எனக்கு இது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்’ என உருகியிருக்கிறது பொண்ணு..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


