இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் அயர்லாந்து - ஜிம்பாப்வே போட்டியின் முடிவே ஆஸ்திரேலியாவின் விதியை தீர்மானிக்கும். இதில் ஜிம்பாப்வே வென்றால் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும். இது இந்தியாவிற்குச் சாதகமாக அமையும்.

 

இந்தியா ஏற்கனவே சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஒருவேளை ஜிம்பாப்வே முன்னேறினால், பிப்ரவரி 26 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும். இது இந்தியாவிற்குச் சுலபமான சவாலாக இருக்கும். 

 

மாறாக, அயர்லாந்து வென்று அதன் மூலம் ஆஸ்திரேலியா உள்ளே வந்தால், சூப்பர்-8 சுற்றில் இந்தியாவிற்கு அது பலத்த சவாலாக அமையும். ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா எப்போதும் இந்தியாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால், இன்றைய போட்டியின் முடிவை இந்திய ரசிகர்கள் குறிப்பாக சென்னை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.