முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற `வித் லவ் தயாரிப்பாளர்கள்!

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமான படம் வித் லவ். இபட்டதில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மதனும், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்தும் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

வித் லவ் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

So happy and deeply honoured to meet the Honble Chief Minister of Tamil Nadu, @mkstalin uncle ?????? @CMOTamilnadu @mageshraj Magesh thambi and I took his blessings for our movie "With Love" which is receiving so much affection in theatres. #WithLove pic.twitter.com/lneRBANIxH

— soundarya rajnikanth (@soundaryaarajni) February 17, 2026


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.