AK முதல் பென்குயின் வரை... டிரெண்டிங் சம்பவங்களுடன் கவனம் ஈர்த்த ஆடினே இருப்பேன் பாடல்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உரவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலான "ஆடினே இருப்பேன்" வெளியானது. இந்தப் படத்தில் அஜித் குமார் ரேசிங், பென்குயின் என சமீபத்திய டிரெண்டிங் சம்பவங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.