Nayanthara:``மூன்று மாநில விருதுகள், உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக.! - நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் விருது விழாவில் பங்கேற்றனர். 2017-ம் ஆண்டு வெளியான அறம் படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

View this post on Instagram

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

மேலும், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நெற்றிக்கண் மற்றும் கூழாங்கல் படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஆனால், நடிகை நயன்தாரா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், மொத்தம் 3 விருதுகள் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு தனது நன்றியையும் அந்த படங்களுக்காக உழைத்த தனது படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை நயன்தாராவின் சமூக வலைதளப் பக்கத்தில், ``அறம் படத்திற்காக எனக்கு மாநில விருது வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மேலும், எங்களது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் (@therowdypictures) சார்பாக நெற்றிக்கண் (NETRIKANN) மற்றும் கூழாங்கல் (KOOZHANGAL) ஆகிய படங்களுக்கும் மாநில விருதுகள் கிடைத்ததற்கும் நன்றிகள்.

மூன்று மாநில விருதுகள்... உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.