IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - நடந்தது என்ன?

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார்.

indian team

இதனிடையே நேற்றையப் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் நின்றிருந்த குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயன்றார்.

கையில் வந்து விழுந்த பந்தை அவர் தவறவிட்டதோடு, அது எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது.

இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது நிதானத்தை இழந்து குல்தீப்பிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஹர்திக் பாண்டியாவின் கோபம் தணியவில்லை.

ஹர்திக் பாண்டியா - குல்தீப் யாதவ்
ஹர்திக் பாண்டியா - குல்தீப் யாதவ்

வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் நேரத்திலும் ஹர்திக் பாண்டியா மீண்டும் குல்தீப் யாதவிடம் சென்று ஆவேசமாகப் பேசும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Here is video of Hardik Pandya & Surya Kumar Yadav angry on Kuldeep Yadav #INDvsPAK #T20WorldCup pic.twitter.com/BsGCCprKNc

— cricketkayudh (@cricketkayudh) February 15, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.