டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

நமீபியா, ஓமன் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தான் ஆடிய 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறின.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.